Wednesday 30 November 2011

அன்னா ஹசாரேவின் மறுபக்கம்


அ.முத்துக்கிருஷ்ணன்

http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-98/A-muthukrishnan-anna%20hazare.jpg
நான் ஒரு எழுத்தாளனாக களம் கண்ட பிறகு என்னை மிகவும் பாதித்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் கயர்லாஞ்சி கிராமத்தில் நடந்த வன்கொடுமைகள். ஒரு தலித் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அந்தக் கிராமமே திரண்டு கொன்ற கொடூரக் காட்சிகள் என் கண்களில் இருந்து இன்றும் அகல மறுக்கிறது. ஹிந்து மதத்தின் தீண்டாமையைச் சகிக்க முடியாமல் அதில் இருந்து வெளியேறி பௌத்த மதத்தில் இணைபவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்வது மகாராஷ்டிரத்தில் வழக்கமாக உள்ளது. அதைப் பற்றிய என் கட்டுரை உயிர்மை’ இதழில் டிசம்பர் 2006ல் வெளியானது. ஜோதிபா புலேஅம்பேத்கர் முதல் நாம் இன்று அறியும் தலித் அரசியல்தலித் இலக்கியம் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்கியது மகாராஷ்டிரா மாநிலம். இந்தப் பின்புலங்களில் அந்த மாநிலத்தில் உள்ள தலித்களின் நிலையை அறியும் ஆவல் ஏற்பட்டது. நானும் என் நண்பர் சஹானா முகர்ஜி அவர்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருபது நாட்கள் பயணம் மேற்கொண்டோம். ஜம்கேத்கரன்ஜாலாசிண்டி,கட்கீபட்ரிமூஞ்சிகையர்லாஞ்சிஹிங்கோலிசிவ்ரி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று தகவல்கள் சேகரித்தோம்.
இந்தப் பயணங்களில்தான் நாங்கள் பூனேயில் இருந்து 87 கி.மீ. தொலைவில் இருந்த ரலேகான் சித்தி வழியாகச் சென்றோம். அந்தக் கிராமத்தில் நாங்கள் சில மணி நேரம் செலவழித்தோம்ஆனால் அது பின்னால் இத்தனை முக்கியத்துவமாக மாறும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. இந்தச் சுற்றுப்பயணங்களின்போது எல்லா கிராமங்களிலும் நான் ஊருக்குள் நுழையும் இடத்திலேயே இறங்கி மெல்ல நடந்து மக்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம்நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 14 ஆண்டுகள் வசித்தவன் என்பதால் மராத்தி மொழியை அறிவேன். இந்தியக் கிராமங்கள் அனைத்தும் ஊரும் சேரியுமாகப் பிரிந்து கிடக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சேரிகளுக்குச் சென்றால் அங்கு ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் சொல்ல மக்களிடம் ஆயிரம் துயரக்கதைகள் மனங்களில் குமுறிக்கிடக்கும்.
அன்னா ஹசாரேயின் சாதனை என இன்று ஊடகங்கள் போற்றும் ரலேகான் சித்தி கிராமத்தில் அவர் களம் கண்ட பிறகு விவசாயத்தில் பல மாற்றங்கள் கொணர்ந்துள்ளார். வானம் பார்த்த பூமியைப் பசுமையாக மாற்றியுள்ளார். ஆனால் அந்தக் கிராமத்தில் அவர் செலுத்தும் அதிகாரம் எத்தகையது என்பதுதான் கேள்விக்குறியே.
அந்தக் கிராமத்தில் யாரும் புகைபிடிக்க இயலாது. புகையிலை சிகரெட் என எந்தப் பொருளும் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யவே தடை உள்ளது. அந்தக் கிராமத்தில் கேபிள் டி.வி. கிடையாதுஅந்தக் கிராம எல்லைக்குள் சினிமா போஸ்டர்கள் கூட ஒட்ட முடியாது. நீங்கள் உங்கள் வீட்டு விசேஷங்களில் கூட சினிமா பாடல்கள் போட இயலாது. ஆனால் துகாராம்கியானேஷ்வர்ஷிர்டி சாய்பாபா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளாக வெளிவந்துள்ள திரைப்படங்களை மட்டுமே அங்கு போடலாம். டிஷ் டி.வி.யின் வருகைக்குப் பிறகு அதனைக் கிராமத்தில் அனுமதி பெறாமல் ஒரு குடும்பம் வாங்கிப் பொருத்தியது. அந்தக் குடும்பத்தை அன்னா ஹசாரே தானே கண்டித்துதண்டனை வழங்கியது சமீபத்திய செய்தி.
அந்தக் கிராமத்தில் கட்சிக் கொடிக்கம்பங்கள்அரசியல் கட்சிக் கூட்டங்கள் என அனைத்திற்கும் தடை. அந்தக் கிராமத்தில் கடந்த 24 ஆண்டுகளாகப் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டதில்லை. அன்னா ஹசாரேயின் விரல் காட்டும் திசையைப் பதவி அலங்கரிக்கும். சட்டசபைபாராளுமன்றத் தேர்தல்களின் பொழுதுகூட அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் இந்தக் கிராமத்தை எட்ட முடியாது.
அங்குள்ள ஹிந்துக்கள் என்றால் அவர்கள் மராத்தாக்கள் மட்டுமே. அதில் தலித்துக்களான சமார்கள்மகர்கள் சேர்த்தியில்லை. இது அங்குள்ள தலித்துகளை மிகவும் கேவலமாக உணரச்செய்கிறது. இந்தக் கிராமத்திற்கு சேவை செய்வதுதான் எங்கள் பணி. எங்களுக்கு இங்கு சம அந்தஸ்து எல்லாம் கிடையாது என பலர் குமுறினார்கள். ஏதோ கடவுள் விட்டபடி என அவர்கள் நொந்து கொண்டார்கள்.
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-98/anna2.jpg
அந்தக் கிராமத்தில் யாரும் மது அருந்த இயலாது. அப்படி அருந்துபவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் பழக்கம் அங்கு உள்ளது. அந்தக் கிராமத்தில் மட்டன் சிக்கன் எல்லாம் பூரணத் தடை. அதை மீறி இறைச்சி உண்ணுபவர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் பழக்கம் உள்ளது. அந்தக் கம்பங்களில் சில நேரம் இரவெல்லாம் கட்டிவைத்து விடுவார்களாம். முன்பு அன்னாவே தன் மிலிட்டரி பெல்டால்தான் அடிப்பாராம். ஆனால் இப்பொழுது இந்த மாதிரியான தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தை அன்னா ஹசாரே அந்தக் கிராமத்தை சேர்ந்த 25 இளைஞர்கள் வசம் ஒப்படைத்துள்ளார். நம் காவல் துறைக்கே இந்த ஷூட் அட் சைட் போன்ற அதிகாரங்கள் கிடையாதுதண்டனை வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கே உள்ளது.
இது கூடப் பரவாயில்லை. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தில் கூட இதே போன்று பல கட்டுப்பாடுகள்தண்டனைகள் விதித்து நடைமுறைப்படுத்தியுள்ளார் அன்னா. கட்டுப்பாடும்தண்டனையும் ஒரு சமூகத்தில் அமைதியைஒற்றுமையைக் காக்க மிகவும் அவசியம் என்பது அன்னாவின் தத்துவம் (இதை எல்லாம் பார்க்கும்பொழுது தமிழ் நடிகர் நம்பியாரின் ஞாபகமாகவே உள்ளது).
இந்தக் கிராமத்தில் ஜனநாயகம்மனித உரிமைகள் என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் நிலைதான் உள்ளது. பொருளாதார மேம்பாடு மட்டும் ஒரு மனிதனை,குடும்பத்தைவாழ்வியல் அனுபவத்தை முழுமை பெறச் செய்யாது. ஒரு மனிதன் தன் சுதந்திரத்தை உணர வேண்டும்தன் உரிமைகளை அனுபவிக்க வேண்டும்என்பதற்காக இங்கு அனைவரும் பல வழிகளில் அதனை சாத்தியப்படுத்த முனைந்து வரும் நேரம்இந்தியாவின் ஒரு கிராமத்தை அன்னா ஹசாரேநிலப்பிரபுத்துவத்திற்கும் அதற்குப் பிந்தைய காலங்களுக்கும் டைம் மெஷினில் அழைத்துச் செல்வது போலவே உள்ளது.
ஊடகங்கள் நினைத்தால் ஒரு மனிதரை நொடிப் பொழுதில் உருவாக்கலாம் என்பதுதான் ராம்லீலா அனுபவம் நமக்கு உணர்த்துகிறது. இது தேசத்தில் இருக்கும் எல்லா கேமிராக்களும் குவிமையமாக அந்த மைதானத்தில் இருந்த பொழுது தோன்றியது. அவர்கள் உருவாக்க நினைப்பது அவர்களது உரிமை என்றால் நாம் நம் laterel thinking ஐக் கொஞ்சம் உஷாராக்கிவிடவில்லை என்றால் நம்மையும் சவாரிக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்பது மீண்டும் ஒரு முறை தெளிவாகியுள்ளது.
கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம் என்றால் நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நீங்கள் ஊழலை ஆதரிப்பவர்’ என்று பலர் கர்ஜிப்பது கேட்கிறது. உடன் கொஞ்சம் ரீவைண்டு செய்தால் "நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நீங்கள் தீவிரவாதத்தை ஆதிரிக்கிறீர்கள்" என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். இன்னும் கொஞ்சம் பார்வர்டு செய்தால் "நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நீங்கள் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறீர்கள்" என்கிற மத்திய அரசின் குரலும் சேர்ந்து கேட்கிறது. ஒரு பன்மையான சமூகத்தில் இரு கருத்துகள் மட்டும் நிலவச் செய்வதுதான் மிக பெரும் ஆபத்து. பல கருத்துகள் இருக்கலாம். ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கலாம். பின் அனைவரும் ஒரு முடிவை எட்டுவது தான் ஜனநாயக முறை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் மாற்றுவது சர்வாதிகாரத்திற்கே இட்டுச்செல்லும் என்பது வரலாறு.
மகாராஷ்டிர தலைமை தகவல் அறியும் உரிமை சட்ட அதிகாரியின் நியமனத்தில் முறைகேடு நடந்ததைக் கண்டித்து ரலேகான் சித்திக்குச் சென்று அன்னா ஹசாரேயின் ஆசிரமத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் கிருஷ்ண ராஜ் ராவ். அவரைக் காவல்துறையை வைத்து உடன் அப்புறப்படுத்தினார் ஹசாரே. இந்த ஊரில் அவரைத் தவிர யாரும் உண்ணாவிரதம் இருக்க முடியாது என்பது கிராமக் கட்டுப்பாடாம். அன்று இரவு அவருக்கு எங்கும் தங்க அனுமதிக்கவில்லை. அருகில் உள்ள பார்நரில் கூட விடுதிகளில் இடம் தர மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அன்றைய இரவை அங்கிருந்த காவல் நிலையத்தில் கழித்துவிட்டு மும்பை சென்று அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதைத் தான் ஒரு சிறிய சர்வாதிகார முயற்சி என்று மேலே குறிப்பிட்டேன்.
அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் மகாராஷ்டிரத்தின் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறதுஅதில் உள்ள 13 மாவட்டப் பொறுப்பாளர்கள் கடும் குற்றப்பின்னணி உடையவர்கள். நிவ்ருத் ஜக்தப்பரசரந்துபி.டி.பாட்டீல்ஹேமந்த்சந்திர கலேசஞ்சய் சுர்னே என நீளும் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களில் தொழில் செய்பவர்களிடம் பணம் பறிப்பது எல்லைகளை எல்லாம் கடந்தது. அந்த சமயம் அன்னா ஹசாரே நடத்தும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது முறைகேடுபணப் பறிப்புநில அபகரிப்பு என பல புகார்கள் ஏராளமாக எழுந்ததைத் தொடர்ந்து 2003 செப்டம்பரில் நீதிபதி சாவந்த் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 2005 பிப்ரவரியில் வெளியானது. 379 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பு மிக விரிவாக அன்னாவின் நிறுவனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பது முதல் ஒரு எளிய காந்தியவாதி எத்தனை லட்சங்களைக் கொண்டு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்பது வரை விவரித்துச் செல்கிறது. உலகெங்கும் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களின் 288 மணி நேர தொடர் நேரடி ஒளிபரப்புகளில் எங்கும் அவரது கடந்த காலங்கள் பற்றிப் பேசப்படவேயில்லை என்பது இன்றைய ஊடகங்களின் மறைமுக அரசியலை நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் விஜய்’ தொலைக்காட்சி நீயா நானா’ லோக்பால் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் என்னிடம் இந்தத் தீர்ப்பைக் கேட்டுப் பெற்றது நம்பிக்கை அளிக்கிறது.
டப்பாவாலாக்கள் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக ஆகஸ்டு 19 அன்று வேலை நிறுத்தம் என்று பெரும் கொண்டாட்டங்கள். 120 ஆண்டுகளில் முதல் முறையாக வேலை நிறுத்தம் என்ற பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்கள் சிலர். அன்று மகாராஷ்டிரத்தில் விடுமுறை தினம்பார்சிகளின் புத்தாண்டான படேடீ அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய வங்கிகள் முதல் எல்லா நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை. தலையே சுற்றுகிறது. இந்த 288 மணி நேர நேரடி ஒளிபரப்பிலும் அவர்கள் செய்திகளை உற்பத்தி செய்யவே முற்பட்டார்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். இதற்கு வாடகைக்குப் பல எழுத்தாளர்களை அமர்த்தினார்கள்பேச்சாளர்களைத் தயார் செய்தார்கள். சில தயாரிப்பாளர்கள் தங்களின் கறுப்புப் பணத்தில் அன்னா ஹசாரேயை வைத்து அடுத்த திரைப்படம் எடுக்க டிஸ்கஷனில் களமிறங்கினார்கள். ஒரு எழுத்தாளர் அவர்கள் அழைக்கும் முன்பே சூப்பர் மேன் அன்னா’ படத்திற்கு வசனத்தை எழுதி முடித்துவிட்டார்.
இதே ராம்லீலா மைதானத்தில்தான் 1975ல் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்குப் பின்னால் இளைஞர்கள் திரண்டார்கள்அவர்களுக்கு இருந்த அரசியல்சமூகத் தெளிவிற்கும் இன்று வெளுத்துப் போன டீ ஷர்ட்டுகளுடன் ஒரு எளிய மேக்கப்பில் வீதிக்கு வந்த மத்தியதர விடலைகளுக்கும் பெரும் பள்ளத்தாக்கான வேறுபாடுகள் உள்ளன. இவர்களில் பலரிடம் சென்று பத்திரிகையாளர்கள் ஜெ.பி. யை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு பலரின் பதில் "எதுஜெபி மார்கன். அந்த கார்ப்பரேட் கம்பெனியா" என்றார்கள்.
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-98/anna3.jpg
இன்று திரண்டதாக மார்தட்டிக் கொள்ளும் இந்த மத்திய தர வர்க்கம்தான் கடந்த 20 ஆண்டுகளில் உலகமயத்தின் வழியாக வந்த மொத்த செழிப்பை அனுபவித்த கூட்டம். இந்தியா முழுவதும் லஞ்சத்தின் விலையை உயர்த்தியதே இந்த வர்க்கம்தான். சாதாரணமாக ஒரு ரேஷன் கார்டைக் கொடுக்க ஒரு குமாஸ்தா டீ செலவுக்குக் கொடுத்துட்டுப் போம்மா என்றிருந்ததை மத்தியதரவர்க்கம்தான் 1000களுக்கு இட்டுச் சென்றது. எங்களால் எங்கும் நேரில் வர இயலாதுஎங்களுக்கு லாஸ் ஆ ஃப் பே ஆகிவிடும் என சொல்லியே தங்களின் பிரதிநிதிகளை அனுப்புகிறோம் என்று அந்தக் காரியங்களை விரைவில் முடிக்க தங்களின் ரூபாய்த் தாள்களை அள்ளி வீசிய வர்க்கம்தான் இந்த மத்திய தர வர்க்கம். அரசு செலவில் படித்துவிட்டு இந்த நாட்டிற்கு மிகப் பெரும் ஙிக்ஷீணீவீஸீ ஞிக்ஷீணீவீஸீஐ ஏற்படுத்தியது இந்த சமூகம்தான். கண்மூடித்தனமாக இவர்களின் நுகர்வு கலாச்சாரம்தான் இன்று கார்ப்பரேட்டுகள் பழங்குடிகளைக் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தக் காரணம். இந்த மத்திய தர வர்க்கம் திசை அறியாது முச்சந்தியில் நிற்கிறது. அவர்களின் குற்ற உணர்விற்கு ஒரு வடிகாலாக அமைந்து விட்டார் அன்னா ஹசாரே.
ஆனால் இன்று நீங்கள் புதிய விளம்பரம் கொடுத்து "Mr.XYZ" ஆடிட்டரை நாடினால் வரியே கட்ட வேண்டியது இல்லை என்று விளம்பரம் கொடுத்தால் ராம் லீலாவை விட அதிக கூட்டம் அடுத்த நாள் காலை அங்கு கூடிவிடும் இந்த மெழுகுவர்த்தி கூட்டம். இதுதான் 1975க்கும் 2011க்கும் உள்ள வித்தியாசம்.
அரவிந்த கேஜ்ரிவால்கிரண் பேடி என இந்தக் குழுவின் பலரைப் பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.வெளிநாடுகளில் இருந்து இவர்கள் பெற்று வருகிற லட்சக்கணக்கான டாலர் பற்றிய செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன. அரவிந்த கேஜ்ரிவால் தனது தொண்டு நிறுவனத்தைத் தான் பணி செய்த தகவல் உரிமை பெறும் சட்டத்திற்குள் கொண்டுவர மறுக்கிறார். கிரண் பேடியின் மீது இந்திய நாட்டின் ரகசிய காப்பை மீறிய புகார்கள் உள்ளன. ராம்தேவின் ஸ்காட்லாந்து தீவில்தான் லோக் பால் அலுவலகம் அமைக்கப்படுமாதிடீரென ஊழலை எதிர்க்க கிளம்பிய இந்தக் கைகள் முழுக்க கறைபடிந்துள்ளது. இவர்கள் ஊடகங்களை வைத்துக் கொண்டு போடும் ஆட்டத்தில் பல கட்டங்கள் இட்டு நிரப்பப்படாமல் உள்ளது. பிரதமரைநீதித்துறையை விசாரணை வரம்பிற்குள் கொண்டு வர துடிக்கும் இவர்கள் இந்த இயக்கங்களுக்குப் பணம் வழங்கும் தொண்டு நிறுவனங்களையும்கார்ப்பரேட் ஊடகங்களையும் ஜன் லோக் பால் வசதியாக வெளியே நிறுத்தி விடுகிறது.
ஜந்தர் மந்தர் உண்ணாவிரதத்தில் அண்ணா ஹசாரேயின் முதுகுக்குப் பின்னால் மகாத்மா காந்தியைக் கொன்ற இயக்கத்தின் பதாகையான பாரத மாதா இருந்தது. ஆனால் இது சில மாதங்களில் ராம்லீலா மைதானத்துக்கு வரும் முன் அது மகாத்மா காந்தியாகவே உருமாறியது. எப்படி இத்தனை பெரிய பள்ளத்தாக்கை இவர்கள் இத்தனை சுலபமாக கடக்கிறார்கள். மக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டும் தொழில் செய்கிறார்கள். இவர்களின் ஜன் லோக் பால் மீதும்போராட்ட முறை மீதும் கேள்விகள் பல அரும்பிய வண்ணம் உள்ளன!
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை முழுக்க முழுக்கத் திட்டமிட்டு நடத்தியது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ. கட்சியை 2014ல் மீண்டும் ஆட்சியில் அமரவைக்க பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதில் இந்த ஊழல் எதிர்ப்பு அவர்களின் துருப்புச் சீட்டுகளில் ஒன்று. இந்த ஆட்டத்திற்குத் தான் அவர்கள் தங்கள் பட்டியலில் உள்ள அன்னா ஹசாரேயையும் ராம்தேவையும் தேர்வு செய்கிறார்கள். அன்னா ஹசாரேயின் கிராமம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகள்படி ஒரு சாதிய கிராமமாகச் செயல்படுகிறது. அதனைப் பார்த்துப் பெருமை பொங்க முதலில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆங்கில் ஏடான ஆர்கனைஸரில் ஏராளமான கட்டுரைகள் எழுதி தங்களின் உறுப்பினர்களுக்கு அவரை ஏற்கும் பக்குவம் வரச் செய்தார்கள். 1987 பிப்ரவரி யில் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் சேஷாத்ரி "ராமராஜ்ஜியத்தை நினைவுபடுத்தும் கிராமம்" என்று கட்டுரை எழுதினார். அடுத்த 1987 பிப்ரவரி 15ல் "ரலேகான் சித்தி சமூக மாற்றத்திற்கு ஒரு புதிய பெயர்" என்று எப்படி ஒரு கோவில் கிராமத்தின் செயல்பாடுகளின் மையமாக திகழ்கிறது என எழுதினார். அதன் அடுத்த மார்ச்ச 1987ல் "நடவடிக்கையில் ஒரு கர்ம யோகி" என்று அண்ணாவை புகழ்ந்து தனது அடுத்த கட்டுரையை எழுதினார்.
அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் இந்தியா முழுவதும் பேசுகிறார்கள். இந்த வழிகளில்தான் தனக்கு அன்னாவை தெரியும் என நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் கூறுகிறார். விஸ்வ ஹிந்து பரிக்ஷத் மற்றும் பா.ஜ.க.வின் மாணவர்கள் அமைப்புதான் இந்தப் போராட்டங்களுக்கான மொத்தம் ஏற்பாடு செய்தது. ராம் தேவ் மற்றும் ஹிந்து நிறுவனங்களுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்டபங்கள்ஆசிரமங்களில்தான் வந்தவர்களுக்கு இலவசமாகத் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுப் பொட்டலங்கள்மருத்துவம் எல்லாம் இந்த அமைப்புகளின் ஏற்பாடே. இந்த ஏற்பாடுகளை நெறிப்படுத்த லேப்டாப்களுடன்எம்.பி.ஏ. படித்த கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் பல குழுக்களாக ஏசி கார்களில் தில்லியை வலம் வந்தார்கள். ராம் லீலா மைதான மேடையின் பின்புறம் அமைக்கப்பட்ட அறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூன்று தலைவர்கள் மொத்தம் 288 மணி நேரமும் முகாமிட்டிருந்தனர்.
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirmmai-98/anna1.jpg
சுதந்திர இந்தியாவில் இத்தனை வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் கார்ப்பரேட் போராட்டம் இதுவே. அன்னாவைப் பரிசோதிக்க அரசு மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லைஇந்தியாவின் மிக விலை உயர்ந்த மருத்துவரான நரேஷ் த்ரேஹன் அமர்த்தப்பட்டார். கோடிகள்பன்னாட்டு நிறுவனங்கள்ஃபோர்ட் பவுன்டேஷன் அளித்த லட்சம் டாலர்கார்ப்பரேட் மீடியாக்களின் ஒளி வெள்ளத்தில் நடந்த ஒரு அக்மார்க் காந்தியப் போராட்டம்.
ஊழலை ஒழிக்க முதலில் நமக்கு சமூக மனிதன் என்னும் பொறுப்புதான் அவசியமாகத் தேவைப்படுகிறது. ஒரே நாளில் சட்டம் இயற்றி இனி எல்லோரும் நல்லவர்களாக மாறிவிடலாம் என்பது போல்தான் உள்ளது இன்றைய டூ மினிட் நூடுல்ஸ் கலாச்சாரம்.
என் பதிவு திருமணத்திற்குச் சென்றோம். காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று நாங்கள் அன்று மாலை மணிக்குத் தான் திரும்பினோம். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் எங்கள் பதிவு காலதாமதம் ஆனது. அன்று பல முறை எங்களைக் குமாஸ்தாக்களை வைத்து பேரம் பேசினார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று10க்கும் மேற்பட்ட பதிவுகள் அதிரடி வேகத்தில் முடிந்தன. மெல்ல விசாரித்தபோது சாதாரன பதிவு என்றால் ஒரு ரெண்டாயிரம்தான் வாங்குவோம். இன்னிக்கி வந்தவங்க எல்லாம் அமெரிக்காவுல வேலை செய்யும் இந்தியர்கள். அவங்களால இங்க காத்திருக்க முடியாதுனு பதிவுக்குப் பத்தாயிரம் குடுத்தாங்க. அப்புறம் என்னஎங்க அய்யா அவங்கள நிக்க வெக்க கூடாதுன்னுட்டாரு என்றார். லஞ்சத்தின் ரேட்டை இப்படித்தான் கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய மத்தியதர வர்க்கமும்வெளிநாட்டு இந்தியர்களும்கார்ப்பரேட்டுகளும் வானுயர உயர்த்தினார்கள். இவர்கள்தான் தங்களை ஒரு சூப்பர் பிரஜைகளாக சதா நினைத்து உயிர் வாழ்கிறார்கள்.
இவர்களின் பேராசைகள் அடங்காதவரை எந்த சட்டத்தை இயற்றினாலும் இங்கு லஞ்சத்தை ஒழிக்க இயலாது. அருணா ராய் மற்றும் பகுஜன் அமைப்புகளும் வெளியிட்ட லோக் பால் மசோதாதான் செயல் சாத்தியம் உடையவையாக இருந்தன (இந்த மசோதாக்களை ஒப்பிட்டு இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம்). அரசின் லோக் பால் பல் இல்லாத பாம்பாகவும்அன்னாவின் லோக் பால் ஊரில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் சுமந்து நிற்கும் ஹிந்துமதக் கடவுளாக ஜனநாயகத்தின் அடிப்டை உரிமைகளை நசுக்கும் பேராற்றலுடன் காட்சியளித்தது.
உண்மையான காந்திய வழியில் இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள இடிந்தகரையில் நடந்து வரும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மக்கள் போராட்டத்தைப் பாருங்கள். 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்தினமும் 25,000 பேர் அவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். குழந்தைகள் பள்ளிகளைப் புறக்கணித்துப் போராட்டம். இந்த127 பேர் தாங்கள் சாக நேர்ந்தால் ஒரே சவப் பெட்டியில் அல்லது குழியில் வைத்து அடக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாதிகளைக் கடந்து தங்களின் வாழ்வாதாரங்களைக் காக்கவும்இந்த தேசத்து மக்களை ஒரு பேராபத்தில் இருந்து மீட்கவும் ஒரு மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அங்கே கார்ப்பரேட்டுகள் இல்லைவெளிநாட்டுப் பணம் இல்லைஅடிப்படை ஏற்பாடுகள் கூட இல்லை. தமிழக அரசு போக்குவரத்தைக் கூட நிறுத்திவிட்டது. எந்தவித கவர்ச்சியும் இல்லாததால் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் இல்லை.

அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு...




அன்புள்ள டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு...


வணக்கம். நான் உங்கள் ரசிகன் அல்ல. விமர்சகன். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்று உங்களை சில வாரம் முன்னால் இதே பக்கங்களில் கோரியிருந்தேன். நீங்கள் கேட்கவில்லை. உலகத்தில் விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் செய்யத் துணியாத ஒரு பிரகடனத்தை செய்திருக்கிறீர்கள். கூடன்குளம் அணு உலை 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று ! அணுத் தொழில்நுட்பம் 100 சதவிகிதம் பாதுகாப்பானது என்று எந்த அணு விஞ்ஞானியும் சொல்லமாட்டார். நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
கூடன்குளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அணு உலைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை ஒழித்துக் கட்ட மத்திய அரசு சாம, தான, பேத தண்ட முறைகள் அனைத்தையும் கையாளுகிறது. அதில் ஒன்றுதான் உங்களை ஏவிவிட்டிருப்பது. அணு ஆயுத, ராணுவ ஆதரவாளரான நீங்கள் அணு உலைக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.உங்கள் விருப்பப்படி உதயகுமாரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயத் தயாராக இருக்கிறது.
அணு உலைகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களோ நாங்களோ ஒருபோதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாங்கள் காந்தியவாதிகள். அதுதான் நமக்குள் அடிப்படை வித்யாசம்.
உங்களுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் பலத்தை பயன்படுத்தி பெரிய பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக உங்கள் ‘ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அதே அளவு இடத்தை எங்களுக்கு இந்த பத்திரிகைகளை ஒதுக்கமாட்டார்கள். ஒதுக்கினால், உங்கள் சாயங்களை வெளுத்துவிடுவோம் என்பது அவர்களுக்கும் தெரியும். நீங்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கைக் கட்டுரையில் பல முழு உண்மைகளை மறைக்கிறீர்கள். பல அரை உண்மைகளை அள்ளி வீசுகிறீர்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தால் இடம் போதாது. முடிந்த வரை இங்கே பார்ப்போம்.
செர்னோபில் விபத்தில் 57 பேர் மட்டுமே இறந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அதை விட அதிகமாக சாலை விபத்தில் பலர் சாவதாக ஒரு அபத்தமான் ஒப்பீடு செய்திருக்கிறீர்கள். சாலைவிபத்து ஏற்பட்டால், விமான, ரயில் விபத்து ஏற்பட்டால், சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மனித நடமாட்டமே அடுத்த பல வருடங்களுக்குக் கூடாது என்ற நிலைமை கிடையாது. ஆனால் அணுவிபத்து ஏற்பட்டால், அடுத்த தலைமுறை வரை தொடரும். செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட கதிரியக்க பாதிப்புகளில் இரண்டாயிரம் பேர் வரை செத்திருக்கிறார்கள் என்பதுதானே முழு உண்மை. அதை ஏன் சொல்லாமல் கேன்சர் கேஸ்கள் என்று மழுப்புகிறீர்கள் ?
1947லிருந்து 2008 வரை 76 அணு உலை விபத்துகள் உலகில் நடந்திருக்கின்றன. (இதில் 56 விபத்துகள் செர்னோபில்லுக்குப் பிறகு நடந்தவை.) அதாவது ஒவ்வோராண்டும் ஒரு பெரிய விபத்து. அதனால் ஏற்பட்ட உயிர், உடமை, வாழ்க்கை சேத நஷ்டங்களின் மதிப்பு மட்டும் வருடத்துக்கு சுமார் 332 மில்லியன் டாலர்கள். எம்.ஐ..டி என்ற உலகப் புகழ் பெற்ற நிறுவனம் ( நீங்கள் படித்த குரோம்பேட்டை எம்.ஐ.டி அல்ல) 2005லிருந்து 2055க்குள் உலகில் நான்கு பெரும் அணு விபத்துகள் நடக்கும் என்று முன்கூட்டியே கணித்திருந்தது. அதில் ஒன்றுதான் 2011ல் நடந்த புகோஷிமா விபத்து.
விபத்து மட்டுமல்ல.அணு உலைகள் இயங்கும் இடங்களிலெல்லாம் கதிரியக்க ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அதை மறுப்பவர் நீங்களும் உங்கள் கும்பலும் மட்டும்தான். அமெரிக்காவின் அணு உலைகள் இயங்கும் 65 இடங்களிலும் ரத்த, மூளை புற்று நோய்கள் அதிகரித்திருப்பதை அவர்களுடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கே கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த உங்கள் அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?
இந்தியாவில் அணு உலைகளில் விபத்தே நடப்பதில்லை என்று இன்னொரு பொய் சொல்லியிருக்கிறீர்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியிடாம்ல் ரகசியமாக அல்லவா அணு சக்தி நிர்வாகம் இதுவரை இருக்கிறது ? அதுவேதான் நிர்வாகம், அதுவேதான் கண்காணிக்கும் உயர் அமைப்பு. குற்றவாளியே நீதிபதியாகவும் இருக்கும் வேறு எந்த துறையும் இந்தியாவில் இல்லை. உச்ச நீதி மன்றம் போல, கணக்குத் தணிக்கை அதிகாரி போல சுயேச்சையான் விசாரணை அமைப்பு அணுசக்தித் துறைக்கு இருந்தால்தானே உண்மைகள் வெளிவரமுடியும்? அப்படி ஒரு விசாரணைக்கு அந்த துறை தயாரா? அணு உலை அமைக்க இடம் தேர்வு செய்வது பற்றிய ஆய்வு முதல், ஊழியருக்கு கதிர் வீச்சு அளவு ஆய்வு வரை எந்த அறிக்கையையும் பகிரங்கப்படுத்த மறுப்பதுதானே வழக்கமாக இருக்கிறது ?
ஒரு விபத்து நடந்து அது பற்றி பத்திரிகைகளில் செய்தி கசிந்து சூழல் ஆர்வலர்கள் குரலெழுப்பியபின்னர் ஒப்புக் கொள்வதுதான் அணுசக்தித் துறையின் வாடிக்கை. இப்படி கல்பாக்கத்தில் விபத்துகள் நடந்து ஆறு மாதம் கழித்து அவர்கள் ஒப்புக் கொண்ட சில விபத்துகள் இதோ: 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் கோர் பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள். ராஜஸ்தான் உலையில் 1991ல் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக ஒரு காண்ட்ராக்டர் பெயிண்ட் அடிக்க கலந்தார். அதிலேயே பெயிண்ட்டர்கள் முகம் கழுவினார்கள். கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கல்ந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள். கைகா ரியாக்டர் கட்டப்பட்டபோது 1994ல், கதிரியக்கம் வெளியேறாமல் தடுக்கும் வட்ட வடிவ டோம் உடைந்து நொறுங்கி 120 டன் கான்க்ரீட் கீழே விழுந்தது.இந்த விபத்து அணு உலை இயங்கத்தொடங்கிய பிறகு நடந்திருந்தால், குட்டி செர்னோபில்தான். அணுசக்தி துறையின் பொறியாளர்களுக்கும் கட்டட காண்ட்ராக்டர்களுக்கும் இருக்கும் “நெருக்கமான உறவினால்” டிசைன்களின் தரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் இது ஏற்பட்டது என்று (நிஜமான) அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் முன்னாள் தலைவருமான ஏ.கோபாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதாவது ஊழல் நடந்திருக்கிறது. இதே போன்ற ஊழல் இந்த வருடம் ஜூலையில் ரஷ்யாவில் நடந்தது. லெனின்கிராடில் அணு உலை கட்டுமானம் நடக்கும்போது தடுப்புக் கவச சுவர் கான்க்ரீட் நொறுங்கி விழ்நுதது. இந்த உலை கூடன்குளத்தில் ரஷ்யர்கள் அமைக்கும் உலையின் அடுத்த மாடல். ஊழல் மிகுந்த இந்தியாவில் எப்படி அணு உலை கட்டுமானம் பாதுகாப்பானது என்று நம்பமுடியும் ?
இந்தியாவில் போதுமான யுரேனியம் இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் அது என்னவோ இலவம்பஞ்சு போல ஆபத்தில்லாமல் எட்டிப் பறிக்கும் பொருள் போல பேசுகிறீர்கள். யுரேனிய சுரங்க விபத்து, ஆபத்து பற்றி எதையும் உங்கள் கட்டுரையில் சொல்லவில்லை. இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோடா யுரேனிய சுரங்கப்பகுதியை சுற்றியுள்ல கிராமங்களில், மலட்டுத்தன்மை, புற்று நோய்கள், பிறவி ஊனம் எல்லாம் தேசிய சராசரியை விட அதிகமாகியிருப்பதை நோபல் பரிசு பெற்ற் உலக அமைப்பான அணுப்போருக்கு எதிரான் மருத்துவர் அமைப்பின் இந்தியக் கிளையின் ஆய்வு தெரிவித்திருக்கிறது.
ஒரு பிரச்சினை வருவதற்கு முன்பு அது வராது என்று சொல்வதும் வந்தபிறகு அதை முன்பே கவனித்துவிட்டோம் என்று சொல்வதும்தான் அணுசக்தி துறையின் வழக்கம். நவம்பர் 1986 கன நீர் அழுத்த அணு உலை பாதுகாப்பு பற்றிய அறிக்கையில் அணுசக்தி நிர்வாகம் சொல்லிற்று- ” இந்தியாவில் சுநாமிகள் வருவதில்லை. எனவே புயல்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.” ஆனால் 2004ல் சுநாமி கல்பாக்கத்துக்கு வந்தது. கல்பாக்கம் உலை சுநாமியைக் கணக்கிட்டு வடிவமைக்கப்பட்டதில்லை. தப்பியது அதிர்ஷ்டமே தவிர, நீங்கள் மெச்சும் அணு விஞ்ஞானிகளின் முன்யோசனையான பாதுகாப்பால் அல்ல.
விபத்துக்கு பயந்தால் முன்னேறமுடியாது என்று ஒரு கருத்து சொல்கிறீர்கள். நீங்கள் விபத்துக்கு பயப்படாமல், கன நீரில் முகம் கழுவி, யுரேனியம் படுக்கையில் படுத்து ஆராய்ச்சி செய்து மேடம் கியூரியைப் போல நோபல் வாங்கிக் கொள்வதில் எங்களுக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.ஆனால் ஒரு மக்கள் சமூகத்தையே அவர்கள் சம்மதம் இல்லாமல் ஆபத்துக்கு உட்படுத்த உங்களுக்கு துளிக் கூட உரிமை கிடையாது. ஆனால் கூடங்குளத்தில் அதைத்தான் செய்கிறீர்கள். நீங்கள் அதை நியாயப்படுத்துகிறீர்கள். எதிர்க்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்கிறீர்கள். என்ன அநியாயம் இது ?
மக்கள் சம்மதத்தைப் பெறுவதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கச் சொல்கிறீர்கள். தரமான, பள்ளிக்கூடம், மருத்துவமனை, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகல், நான்குவழிச் சாலை எல்லாவற்றையும் கூடங்குளத்தை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குறுதி தருகிறீர்கள். அய்யா, இதையெல்லாம் அணு உலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கிராமங்களுக்கு செய்வதுதானே அரசின் கடமை? அணு உலைக்கு சம்மதித்தால்தான் செய்வீர்களா? கல்பாக்கத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா? இல்லையே ? ஏன் இல்லை ? அங்கே எதிர்ப்பியக்கம் நடக்கவில்ல. எனவே லஞ்சம் கொடுக்க வில்லை, அல்லவா?
கூடங்குள அணு உலை எதிர்ப்புக்குப் பின்னால் அந்நிய சக்திகள் இருப்பதாக நீங்களும் பூச்சாண்டி காட்டியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரா ஏகாதிபத்ய சக்திகள் இந்தியா முன்னேறவிடாமல் தடுக்க இப்படி செய்வதாக் சொல்கிறீர்கள். அந்த சக்தி யார் ? அமெரிக்காதானே ? அது மன்மோகன் அரசுடன் போட்ட 123 ஒப்ப்ந்தத்தின் நோக்கம் இந்தியாவை முன்னேற்றுவதா? அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளிடம் அணு உலைகளை வாங்க இந்தியாவை சம்மதிக்கவைத்த திட்டம்தானே அது ? அதில் எப்படி இந்தியா முன்னேறும் ? விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈட்டை அணு உலை விற்ற கம்பெனி முழுக்க தரமுடியாது. இந்திய அரசே ஏற்கவேண்டும் என்று சொல்லும் ஒப்பந்தம்தானே அது ? அதை நீங்கள், ஏன் அய்யா அப்போது குடியரசுத்தலைவராக இல்லாதபோதும் எதிர்க்கவில்லை ? உலகப் பொருளாதார ஏகாதிபத்யத்துடன் அந்த ஒப்பந்தம் போடத் தடையாக இருந்த இந்திய இடதுசாரிகள் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை முறியடிக்க முலாயம் சிங் யாதவின் உதவியை நீங்கள்தான் பெற்றுத் தந்தீர்கள், இல்லையா? கூடங்குளம் விஷயத்தில் மட்டும் 100சதவிகித தேசபக்தர் ஆனது எப்படி ? 123ல் மட்டும் அமெரிக்க ஆதரவாளராக இருந்தது எப்படி ?
ஜெர்மனி அணு உலைகளை மூடுகிறது என்று நாங்கள் சுட்டிக் காட்டினால், அதற்குக் காரணம் அதனிடம் யுரேனியம் இல்லை என்றும் ஆனால் இந்தியாவிடம் போதுமான யுரேனியம் இருப்பதால் நமக்கு அணு உலைதான் லாபமானது என்றும் கதை விடுகிறீர்கள். அப்படியானால் ஏன் 123 ஒப்பந்தம் போட்டு நாம் யுரேனியத்தையும், அணு உலை இயந்திரங்களையும் வெளிநாடுகளில் வாங்க வேண்டும் ? ஏன் கூடங்குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து யுரேனியம் வரவேண்டும் ? நம்மிடமே இருக்கிறதே ?
உங்கள் அசல் நோக்கம் மின்சாரமே அல்ல. அணுகுண்டுதான். மின்சார அணு உலைகளுக்கு வெளிநாட்டு யுரேனியம் வாங்கினால், நம்மிடம் உள்ள யுரேனியத்தை மொத்தமாக அணுகுண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தலாம். வெளிநாட்டிலிருந்து வாங்கும் யுரேனியம் உள்ள உலைகள் மட்டும் சர்வதேச கண்காணிப்புக்கு உட்படும். நம் அணுகுண்டு உலைகள் கண்காணிப்பில் வராது என்பதுதானே அரசாங்கத்தின் திட்டம், இல்லையா?
உங்கள் நீண்ட கட்டுரையில் ஒரே ஒரு விஷயத்தில்தான் ஏறக்குறைய முழு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். சூரிய சக்தியும் காற்று சக்தியும்தான் முழுமையான தூய்மையான பசுமை சக்திகள். அவற்றுக்கு இந்தியாவில் மாபெரும் வாய்ப்புள்ளது என்பதுதான் அந்த உண்மை. ஆனால் அவற்றை நிலையானதாக நம்பமுடியாது என்று சொல்லி நல்ல பாலில் பத்து சதவிகிதம் கனநீர் கலந்துவிட்டீர்கள். ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் இப்போதே 20 சதவிகிதம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் பெறும்போது இங்கே ஏன் முடியாது ? உங்கள் விஞ்ஞான அறிவும் கோடானுகோடி ரூபாய்களும் அதற்கல்லவா செலவிடப்படவேண்டும்? சூரியசக்தியிலிருந்து 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் இங்கே சாத்தியம்.
அவ்வளவு ஏன் ? இப்போது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம் மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்துகொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில் இந்த இழப்பு வெறும் 7 சதவிகிதம்தான். விநியோகத்தில் இழப்பை குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய்தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் ந்மக்குக் கிடைத்துவிடும். கிராம மேம்பாட்டுக்காக புரா விடுகிறீர்களே. ஏன் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் 10 மெகாவாட், 50 மெகாவாட் அளவில் மாற்று எரிசக்தி மூலம் மின் நிலையம் அமைத்து தன்னிறைவு பெறும் திட்டம் உங்கள் புராவில் இடம் பெறுவதில்லை ? ஏன் பிரும்மாண்டமான ஆபத்தான கோடிக்கணக்கில் விழுங்கும் அணுதிட்டங்களே உங்களுக்கு இனிக்கின்றன ?
இந்த மாதம் 81 வது வயதில் நுழைந்துவிட்டீர்கள்.கடந்த 50 வருடங்களில் அணுசக்திதுறை அடுத்த இருபதாண்டு திட்டம் என்று சொன்ன எதுவும் அதன்படி நடக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசு விஸ்வாசத்தினால், இந்த தள்ளாத வயதில் டெல்லி, நெல்லை, கூடங்குளம் என்று நீங்கள் அலைவது வருத்தமாக இருக்கிறது. வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறீர்கள். அதிகபட்சம் இன்னும் 20 வருடங்கள். நூறைத் தாண்டி மனிதன் ஆரோக்கியமாகக வாழ்வது அரிது. உங்கள் நூற்றாண்டு வரும்போது இந்தியாவில் அணு மின்சாரம் நிச்சயம் மொத்த தேவையில் 10 சதவிகிதத்தைக் கூட பூர்த்தி செய்திராது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாகியிருக்கும். லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை நசுக்கியிருக்கும்.
கனவு காணச் சொல்வது உங்கள் வழக்கம். எங்கள் கனவு அமைதியான இயற்கையோடு இயைந்த பசுமை வாழ்க்கை. உங்கள் கனவில் என்ன வருமோ எனக்குத் தெரியாது. ஒரு கோரமான அணு விபத்தை இந்தியாவில் உங்கள் வாழ்நாளில் நீங்கள் பார்க்கும் கொடுமை உங்களுக்குக் கனவிலும் நேராமல் இருக்கட்டும்.
இரவு படுக்கச் செல்லும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். அணுஉலைகள் குண்டு தயாரித்தாலும் மின்சாரம் தயாரித்தாலும் அவை மக்கள் நலனுக்கு எதிரானவை என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயம் நன்றாகத் தெரியும். அணு மின்சாரம் ஆயுத திட்டத்தின் ஒரு முகமூடி மட்டும்தான்.
மின்சாரம்தான் உண்மையான நோக்கம் என்றால் உங்களுக்குப் பிடித்தமான் காயத்ரி மந்திரத்தைப் பின்பற்றுவீர்கள். பாரதி வார்த்தையில் அதை நினைவுபடுத்துகிறேன். செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக.
அன்புடன்
ஞாநி

Sunday 20 November 2011

இலவச வீடியோ கன்வெர்டிங் மென்பொருள்

வணக்கம் நண்பர்களே ,
இது ஒரு இலவச வீடியோ கன்வெர்டிங் மென்பொருள் . முயற்சி செய்து பாருங்கள் .

http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm

Nanbargalae

வணக்கம் .
நான் இந்த ப்ளாக் க்கு புதியவன் . தங்களுக்கு தெரிந்த தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

நன்றி

மதுரை பாண்டி